உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / "பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை தேவை

"பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை தேவை

புதுச்சேரி : 'பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வி.எம்.சி.சிவக்குமார் கூறினார். பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது: வேலிகாத்தான், பார்த்தீனிய செடிகளை அழிக்கப் போவதாக கூறியுள்ளனர். இந்த பணியை பொதுப்பணித்துறையும், வேளாண்துறையும் சேர்ந்து செய்ய வேண்டும். ஆகாய தாமரை செடிகளையும் அழிக்க வேண்டும். காரைக்காலில் மழைக்கு முன் ஆகாய தாமரை செடிகளை அழிக்கவில்லை என்றால் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது பாதிப்பு அதிகமாக இருக்கும். பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கைகள் தேவை. சிறிய பண்ணைகள் அமைக்க வேண்டும். தெர்மல் பிளாண்ட்டை விரைவில் கொண்டு வர வேண்டும். நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் நிறைய காலி இடங்கள் உள்ளன. அவற்றை உடனே நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்