உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டி 20 கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி பாரா அணி வெற்றி

டி 20 கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி பாரா அணி வெற்றி

வில்லியனுார்: தமிழ்நாடு பாரா கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் தென் மாநில அளவில் நடந்த டி20 கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி பாரா கிரிக்கெட் அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.தமிழ்நாடு பாரா கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் தென் மாநில அளவிலான டி20 கிரிக்கெட் போட்டி ஓசூரில் கடந்த மாதம் நடந்தது.இந்த போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களை சேர்ந்த பாரா அணிகள் பங்கேற்று விளையாடியது. அருணகிரி தலைமையிலான புதுச்சேரி பாரா கிரிக்கெட் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று டி20 சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.சாதனை படைத்த புதுச்சேரி பாரா கிரிக்கெட் அணி வீரர்களை, புதுச்சேரி பாரா அசோசியேஷன் சேர்மன் பாஸ்கரன், துணைச் செயலாளர் அருள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை