மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளி வீரர்கள் சாதனை
13-Dec-2024
பாகூர்: உலக அளவிலான பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி சார்பில், பங்கேற்ற புதுச்சேரி வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றனர்.உலக அளவிலான 5வது ஜூனியர் பென்காக் சிலாட் போட்டி, கடந்த மாதம் 18ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை, அபுதாபி நாட்டில் நடைபெற்றது. இதில், ஜூனியர் பிரிவில் இந்திய அணி சார்பில் புதுச்சேரி வீரர்கள் பாலபிரசாத், சுர்ஜித், அறிவுமதி, அனுகிரகா, செஞ்சோலை, ஓவியா, செம்மதி, ஸ்ரீஹரிணி, சப் ஜூனியர் பிரிவில் செந்நிலா ஆகியோர் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.இதில், ஜூனியர் ரெகு பிரிவில் செஞ்சோலை, ஓவியா, செம்மதி ஆகியோர் வெள்ளி பதக்கம், சோலோ பிரிவில் ஸ்ரீஹரிணி வெள்ளி, அனுகிரகா வெண்கல பதக்கம், சப் ஜூனியர் பிரிவில் செந்நிலா வெண்கல பதக்கம் வென்று புதுச்சேரிக்கு பெருமை தேடி தந்தனர். இவர்களுடன், இந்திய பென்காக் சிலாட் கூட்டமைப்பின் சார்பில், இந்திய அணியின் மேலாளராக புதுச்சேரியை சேர்ந்த அருள்ஜோதி சென்றிருந்தார்.வெற்றி பெற்ற வீரர்கள், முதல்வர் ரங்கசாமி மற்றும் பாகூர் தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். புதுச்சேரி அமெச்சூர் பென்காக் சிலாட் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
13-Dec-2024