உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பளு துாக்கும் போட்டியில் புதுச்சேரி மாணவிக்கு வெள்ளி

பளு துாக்கும் போட்டியில் புதுச்சேரி மாணவிக்கு வெள்ளி

புதுச்சேரி : கேலோ இந்தியா விளையாட்டில் புதுச்சேரி மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.கேலோ இந்தியா யூத் விளையாட்டின் 6வது சீசன் போட்டிகள் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரையில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.சென்னையில் நேற்று முன்தினம் பெண்களுக்கான பளுதுாக்கும் போட்டி (வெயிட் லிப்டிங்) நடந்தது. இதில், 64 கிலோ எடை பிரிவில் புதுச்சேரியை சேர்ந்த ஹர்ஷிகா வெள்ளிப் பதக்கம் வென்றார். குளூனி பள்ளி மாணவியான இவர், 97 கிலோ எடையை துாக்கி வெள்ளி பதக்கத்தை வென்று சாதித்துள்ளார்.கேலோ இந்தியா விளையாட்டில் மல்லர்கம்பம் போட்டி கடந்த வாரம் திருச்சியில் நடந்தது. இதில், பெண்களுக்கான தனி நபர் சாம்பியன்ஷிப் பிரிவில் புதுச்சேரியை சேர்ந்த ஓவியா வெண்கலப் பதக்கம் வென்றார். இவர், காந்தி வீதியில் உள்ள சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். இத்தகவலை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ