உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி டு அயோத்தி

புதுச்சேரி டு அயோத்தி

புதுச்சேரியில் இருந்து உத்தரபிரதேசம் லக்னோ அருகில் உள்ள அயோத்திக்கு செல்ல நேரடி விமான சேவை, ரயில் சேவை கிடையாது. ஆனால், சென்னையில் இருந்து தினசரி ஏராளமான விமான சேவை உள்ளது. அதுவும் பிப். 1ம் தேதிக்கு பிறகு ஏராளமான விமான நிறுவனங்கள் அயோத்திக்கு குறைந்த கட்டணத்தில் விமானம் இயக்குகிறது.சென்னையில் இருந்து அயோத்திக்கு ரயில் சேவை உள்ளது. வாரந்தோறும் திங்கள் கிழமை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 1:10 மணிக்கு செல்லும் ஷரத்தா சேது அதிவிரைவு ரயில் (22613) அயோத்திக்கு செல்கிறது.சென்னையில் இருந்து லக்னோவுக்கு வாரந்தோறும் 4 ரயில்கள் இயக்கப்படுகிறது. லக்னோவில் இருந்து 127 கி.மீ., துாரத்தில் உள்ள அயோத்திக்கு இணைப்பு ரயில் அல்லது பஸ், டாக்ஸி மூலம் செல்ல முடியும். அயோத்தியில் இருந்து 189 கி.மீ., துாரத்தில் உள்ள வாரணாசிக்கு, சென்னையில் இருந்து வாரம் 4 ரயில் செல்கிறது. காசி சென்று அங்கிருந்தும் அயோத்திக்கு செல்ல முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ