கண்ணகி அரசு பள்ளியில் பொம்மலாட்ட பயிலரங்கம்
புதுச்சேரி: வில்லியனுார் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளியில் பொம்மலாட்ட பயிலரங்கம் நடந்தது. நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடந்த பொம்மலாட்ட பயிலரங்கினை, நல்லாசிரியர் வளர்மதி முருகன் நடத்தினார். இப்பயிலரங்கில், பிளஸ் 1 பயிலும் மாணவிகள் மிக ஆர்வமாக கலந்து கொண்டு கைப்பாவை பொம்மைகளை செய்து மகிழ்ந்தனர். ஏற்பாடுகளை, நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு அதிகாரி ரமணா செய்திருந்தார்.