உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராமர் கோவில் அட்சதை; வீடுகளில் ராமலிங்கம் எம்.எல்.ஏ.,வழங்கல்

ராமர் கோவில் அட்சதை; வீடுகளில் ராமலிங்கம் எம்.எல்.ஏ.,வழங்கல்

புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதியில் வீடு வீடாக சென்று,ராமர் கோவில் கும்பாபிஷேக பத்திரிக்கை மற்றும் அட்சதையை ராமலிங்கம் எம்.எல்.ஏ., வழங்கினார்.அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடக்கின்றது.இதனை முன்னிட்டு ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் வீடு தோறும் ராமர் கோயில் கும்பாபிஷேக பத்திரிக்கை மற்றும் அட்சதை வழங்கும் துவக்க நிகழ்ச்சி ராமலிங்கம் எம்.எல்.ஏ.,தலைமையில் நடந்தது.தொடர்ந்து வீடு வீடாக சென்று ராமர் கோவில் கும்பாபிஷேக பத்திரிக்கை மற்றும் அட்சதையை வழங்கினார்.ஏற்பாடுகளை ராஜ்பவன் தொகுதி பா.ஜ., தலைவர் நாகராஜன், நகர மாவட்ட பொறுப்பாளர் செல்வ கணபதி,பொதுச்செயலாளர் ஆனந்த கண்ணன்,நிர்வாகிகள் முரளி பாண்டியன்,கதிரவன் ஆனந்தபாஸ்கர்,அருண்குமார்,மஞ்சினி,சதீஷ்குமார்,அருண்குமார் மாலதி,சித்ரா,பாக்கியா,சசிகலா,வள்ளி உள்பட பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்