உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி நேரு வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

புதுச்சேரி நேரு வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

புதுச்சேரி: நேரு வீதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து கிழக்கு பிரிவு போலீசார் நேற்று அகற்றினர்.புதுச்சேரி நேரு வீதி போக்குவரத்து முக்கியத்துவம் வாழ்ந்த சாலை. நுாற்றுக்கணக்கான வியாபார நிறுவனங்கள் உள்ளது. இங்கு தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் சாலை ஆக்கிரமித்து பொருட்கள் வைத்து செய்யும் வியாபாரத்தால் வாகன ஓட்டிகளால் இச்சாலையை எளிதாக கடந்து செல்ல முடிவதில்லை.இதையெடுத்து, போக்குவரத்து கிழக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் நேற்று மாலை நேரு வீதியில், ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.நடைபாதையில் பொருட் களை வைக்க கூடாது, சாலையில் பொருட் கள் இருந்தால் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும், சாலையில் தாறுமாறாக நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ஒரு பக்கம் மட்டும் பார்க்கிங் பயன்படுத்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி