உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திரா நகர் தொகுதியில் சாலை மேம்பாட்டு பணி

இந்திரா நகர் தொகுதியில் சாலை மேம்பாட்டு பணி

புதுச்சேரி: இந்திரா நகர் தொகுதியில் சாலை மேம்படுத்தும் பணியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.இந்திரா நகர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வெள்ளவாரி வீதி, ரங்கசாமி வீதியில் 1.65 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை பொதுப்பணித் துறை கட்டடங்கள் சாலை மத்திய கோட்டம் மூலம் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான புதுச்சேரி அரசின் ஆணை பெறப்பட்ட சூழ்நிலையில் பணி துவக்க விழா நடந்தது.அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஆறுமுகம் முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி பணிகளை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், கட்டடங்கள் சாலை மத்திய கோட்டம் செயற்பொறியாளர் திருஞானம், உதவி பொறியாளர் பன்னீர், இளநிலை பொறியாளர் விஜயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி