உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

பாகூர்: ஆதிங்கப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் நான்சி ஏஞ்சலின் தலைமை தாங்கினார். கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், போலீசார் ராகுல், வெங்கடாசலம் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து நடந்த சாலை விழிப்புணர்வு குறித்த போஸ்டர் தயாரித்தல், ஸ்லோகம் எழுதுதல், சாலை குறியீடுகள் வரைதல், வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் ரகுநாதன் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் வெர்ஜினியா, ராஜலட்சுமி, பிரதீபா, ராகவன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை