உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அழுகிய நெற்பயிர்கள் பாகூர் விவசாயிகள் கவலை

அழுகிய நெற்பயிர்கள் பாகூர் விவசாயிகள் கவலை

பாகூர் : பாகூர் பகுதியில் மழை மற்றும் வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்கள் அழுகியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.புதுச்சேரியின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில், 5,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் சம்பா பருவத்தில் நெல் நடவு செய்யப்பட்டிருதந்து. தொடர் மழை மற்றும் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, பாகூர், குருவிநத்தம், சோரியாங்குப்பம், பரிக்கல்பட்டு, இருளஞ்சந்தை, சேலியமேடு, அரங்கனுார், கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், கன்னியக்கோவில், காட்டுக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்திருந்த நெல், வேர்க்கடலை, மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் நீரில் முழ்கி அழுகின.கடந்த வாரம் மழை பொழிவு சற்று குறைந்து, வெயில் அடித்ததால், வயல்களில் தேங்கிய மழை நீர் வடிந்து நிலம் காய்ந்து வந்தது. இதையடுத்து, வெள்ளத்தில் சிக்கி எஞ்சி இருக்கும் நெற்பயிர்கள் தண்டு அழுகலால் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்கு தேவையான உரங்கள் போட்டு எப்படியாவது காப்பாற்றிட விவசாயிகள் முயற்சி மேற் கொண்டு வருகின்றனர்.பல இடங்களில் வயல்வெளியில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில், கடந்த சில நட்களாக மீண்டும் அவ்வப்போது கன மழை பெய்து வருவதால், மீதிமிருக்கும் பயிர்களும் அழுகி வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை