உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ. 3 கோடியில் புது பொலிவு பெறும் 32 சிக்னல்கள்

ரூ. 3 கோடியில் புது பொலிவு பெறும் 32 சிக்னல்கள்

புதுச்சேரி : நகர பகுதியில் 32 சந்திப்புகளில் உள்ள சிக்னல்களில் 3 கோடி ரூபாய் செலவில் புதுபொலிவு பெற உள்ளது.புதுச்சேரியில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. அதை ஈடுகொடுக்க முடியாமல் சாலைகள் திணறி வருகின்றன. குறிப்பாக,சிக்னல்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.ஆனால் நகர பகுதியில் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன சிக்னல்கள் முழுவதுமாக செயல்படவில்லை.அதில் உள்ள சிக்னல்கள் விளக்கு எரியாமல் இருளிலில் மூழ்கி கிடக்கின்றன. சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பங்களும் சரிந்துபோய் கிடக்கின்றன.சிக்னல் செயல்படாத இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட நேரம் வாகன ஓட்டிகள் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நகர பகுதியில் 32 சந்திப்புகளில் 3 கோடி ரூபாய் செலவில் சிக்னல்கள் புதுபொலிவு பெற உள்ளது.இதற்கான சிக்னல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில்,அவற்றை முக்கிய சிக்னல்களில் இறக்கப்பட்டு வருகின்றன.விரைவில் இருண்டு கிடக்கும் சிக்னல்கள் அனைத்துமே புதுபொலிவுடன் வாகனங்களுக்கு வழிகாட்ட உள்ளன. போக்குவரத்து போலீசார் கூறும்போது,நகர பகுதியில் அதிகரித்து வரும் வாகனங்களை கருத்தில் கொண்டு அனைத்து சிக்னல்கள் அனைத்துமே புதுபொலிவுடன் இயங்க உள்ளன. இதன் மூலம் ஒரே நேரத்தில் வாகனங்கள் குவிந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தடுக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை