| ADDED : பிப் 27, 2024 11:52 PM
பாகூர் : கிருமாம்பாக்கத்தில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பீர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கிருமாம்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் நேற்றிரவு பரிக்கல்பட்டு - முள்ளோடை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியார் மதுபானக்கடை அருகே சந்தேகத்திற்கிடமாக அட்டை பெட்டியுடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசார் வருவதை கண்ட அந்த வாலிபர், அட்டை பெட்டியை அங்கேயே போட்டுவிட்டு, தப்பி ஓடிவிட்டார். பின்னர், போலீசார் அந்த அட்டை பெட்டியை சோதனை செய்தனர்.அதில் 650 எம்.எல்., அளவுள்ள 72 பீர் பாட்டில்கள் இருந்தன. இதையடுத்து பீர் பாட்டில்களை பறிமுதல் செய்த கிருமாம்பாக்கம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.மேலும் தப்பியோடிய வாலிபர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் லோக்சபா தேர்தல் முன்னிட்டு, தமிழகப் பகுதிக்கு மதுபாட்டிலை கடந்த முயன்றாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும்.