உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அகல் விளக்குகள் விற்பனை ஜோர்

 அகல் விளக்குகள் விற்பனை ஜோர்

அரியாங்குப்பம்: கார்த்திகை தீபத்தையொட்டி, முருங்கப்பாக்கத்தில் அகல் விளக்குகள் விற்பனை நடந்து வருகிறது. முருங்கப்பாக்கம் பழைய அரியாங்குப்பம் சாலையில், சட்டி, பானைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், வீடுகளுக்கு தேவையா ன மண்ணால் செய்யப்பட்ட ஜாடிகள், விளக்கு உள்ளிட்ட அலங்கார பொருட்களும் விற்பனை செய்து வருகின்றனர். கார்த்திகை தீபத்தையொட்டி, சிறிய அளவு முதல் பெரிய அளவிலான அகல் விளக்குகள், பல டிசைன் அகல் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. பொது மக்கள் ஆர்வமுடன் அகல் விளக்குகளை வாங்கிச் சென்றனர். அதே போல், புதுச்சேரி நகரப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் அகல் விளக்கு விற்பனை ஜோராக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ