மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
5 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
5 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
5 hour(s) ago
புதுச்சேரியில் தனி நபருக்கு ஒரு நாளைக்கு கிராம பகுதியில் 80 லிட்டரும், நகர பகுதியில் 135லிட்டர் தண்ணீர் தற்போதுவினியோகிக்கப்படுகிறது. தேசிய அளவில் ஒப்பிடுகையில், இது மிகவும் அதிகம்.தண்ணீர் வளம் நிறைந்த, புதுச்சேரி மாநிலத்தின் நான்கு பிராந்தியங்களின் கடலோர கிராமங்களில் தண்ணீர் வேகமாக உப்பு நீராகா மாறி வருகிறது. படுபாதாளம்
பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீர், கடந்த காலங்களில் மேல் ஊற்றில் இருந்து வினியோகம் செய்யப்பட்டது. நிலத்தடி நீர் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டதால் அனைத்து போர்வெல்களிலும் கீழ் ஊற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதே வேகத்தில் தண்ணீரை ஊறிஞ்சினால் கடலோர கிராமங்களில் உப்பு தண்ணீர் மட்டுமே கிடைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாற்று திட்டம்
பல பகுதிகளில் தற்போது வினியோகம் செய்யப்படும் குடிநீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை.எதிர்கால சந்ததியினர் சிக்கலில் மாட்ட கூடாது என்றால், இருக்கின்ற நிலத்தடி நீர் மட்டத்தை காப்பாற்றினால் மட்டுமே சாத்தியமாகும்.மாற்று திட்டமாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை புதுச்சேரி அரசு கையிலெடுத்துள்ளது.முதற்கட்டமாக 1 எம்.எல்.டி., அளவிற்கு கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்தை சிறிய அளவில் செயல்படுத்த புதுச்சேரி அரசு தற்போது முடிவு செய்துள்ளது.இது தொடர்பான விரிவான செயல்திட்டம் கடனுதவி பெறுவதற்காக நபார்டு வங்கிக்கு அனுப்பப்பட்டது. இந்த திட்ட அறிக்கையை நபார்டு வங்கியும் தற்போது ஏற்றுக்கொண்டு 26.35 கோடி ரூபாய் கடனுதவியை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.நிதி பிரச்னை தீர்ந்துள்ள சூழ்நிலையில், லோக்சபா தேர்தலுக்கு முன் கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்தை துவங்க திட்டமிட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் டெண்டர் பணிகள் துவங்க உள்ளன.புதுச்சேரி மாநிலத்திற்கு தினமும் 220 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி.,) குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்தின் மூலம் 1 எம்.எல்.டி., குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். இத்திட்டம் உப்பளம் கடற்கரையோரம் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது.இந்த கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 500 கிலோவாட் மின்சாரம் தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கடல் நீரில் இருந்து கிடைக்கும் குடிநீரில் தரம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குடிநீருக்காக பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும்.இது இந்திய தரநிலை ஐ.எஸ்.-10500 (2012) க்கு இணங்க இருக்கும் என்பதில் பிரச்னை இருக்கபோவதில்லை. மேக் இன் இந்தியா
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் முழு முழுக்க இந்தியாவில் தயாரிக்கப் பட்ட கருவிகளை கொண்டே மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கருவிகள் ஏதேனும் பழுதானாலும் அவற்றை சரி செய்வது எளிதாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுத்து பணிகளை பொதுப்பணித் துறை வேகப்படுத்தி வருகின்றது.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago