| ADDED : ஜன 21, 2024 04:28 AM
புதுச்சேரி: நல்லவாடு அரசு நடுநிலைப் பள்ளியில் சாரண, சாரணியர் சிறப்பு முகாம் நடந்தது.முகாமில், நல்லவாடு சமுதாய நலக்கூடத்தில் துாய்மைப் பணி நடந்தது. அணி முறைப் பயிற்சி குறித்து ஆசிரியர் மனோகர் விளக்கினார். மாவட்ட பயிற்சி ஆணை யர்கள் அருள்மொழி, மோகன்ராஜ் சாரண இயக்க வரலாறு குறித்து பேசினர்.முகாமில், முதலுதவி குறித்து மாநில துணைப் பயிற்சி ஆணையர் முருகையன், கைவினைப் பயிற்சி நுண்கலை ஆசிரியர் சுகுமாறன், முடிச்சுகள் மற்றும் கட்டுகள் குறித்து மாவட்ட பயிற்சி ஆணையர் ஐயப்பன் ஆகியோர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.முகாம் நிறைவு விழாவிற்கு தலைமை ஆசிரியர் துரை ராமலிங்கம் தலைமை தாங்கினார்.ஆசிரியை பத்மாவதி வரவேற்றார். ஆசிரியர்ஜெயக்குமார் அறிக்கை வாசித்தார்.மாநில அமைப்பு ஆணையர் சண்முகம் முகாமில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.