உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகளிருக்கு விதை தொகுப்பு

மகளிருக்கு விதை தொகுப்பு

புதுச்சேரி:ஊரக வளர்ச்சி துறையின்சார்பில், புதுச்சேரியில் உள்ள மகளிருக்கு விதை தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது.இது குறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:புதுச்சேரி ஊரக வளர்ச்சி துறையின்மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் கீழ், அரியாங்குப்பம், வில்லியனுார், காரைக்கால் உள்ளிட்ட 3 வட்டாரங்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர்.இந்த மூன்று வட்டாரங்களில் உள்ள 108 கிராம பஞ்சாயத்துகளில் தகுதி வாய்ந்த குடும்பங்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு முதல் மாற்றுதிறனாளிகள், நலிவுற்றோர், முதியோர் என, அனைத்து தகுதி வாய்ந்த குடும்பங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன.மேலும் கிராமப்புறத்தில் உள்ள குடும்பங்களில் ஊட்டச்சத்து உணவினை உறுதிப்படுத்த அவர்தம் வீட்டு தோட்டங்களில் காய்கறிகள், கீரைகள், பழக்கன்றுகளை வளர்த்து சத்தான காய்கறிகளை உண்பதன் மூலம் பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகை போன்ற குறைபாடுகளை தடுக்க முடியும்.இந்த நோக்கத்தோடு, தை பட்டத்தில் குடும்பங்கள் தோறும் வீட்டில் காய்கறி தோட்டம் அமைத்து பயன்பெற வேண்டும் என்பதற்காககிராமப்புற மக்களுக்கு காய்கறி விதை தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது.மகளிர் இந்த விதை தொகுப்புகளை பெற்று தங்களுடைய தோட்டங்களில் காய்கறி, கீரை வகைகளை வளர்த்து பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ