மேலும் செய்திகள்
வாலிபர் மர்ம சாவு போலீசார் விசாரணை
04-Feb-2025
கடலுார் : வடலுாரில் ஈ.வெ.ரா., குறித்து பேசிய வழக்கில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு ஆஜராகாமல் அவகாசம் கேட்டுள்ளார்.கடலுார் மாவட்ட நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம், வடலுாரில் கடந்த ஜன., 8ம் தேதி நடந்தது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிருபர்களிடம் ஈ.வெ.ரா., குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். இந்த கருத்துகள் அனைத்தும் அவதுாறு என எதிர்ப்புகள் கிளம்பியது. இதுகுறித்த புகாரின்பேரில், சீமான் மீது வடலுார் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். இவ்வழக்கு தொடர்பாக நேற்று 14ம் தேதி வடலுார் போலீஸ் ஸ்டேஷனில் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும் என சீமானிடம் அவரது வீட்டில், கடந்த 10ம் தேதி, போலீசார் சம்மன் கொடுத்தனர்.ஆனால், நேற்று வடலுார் போலீஸ் ஸ்டேஷனில் சீமான், விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரது தரப்பில், கடலுாரைச் சேர்ந்த வழக்கறிஞர் காமராஜ் ஆஜரானார். பின், 'ஈ.வெ.ரா., குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக தமிழகம் முழுதும் 75க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திற்கும் செல்ல முடியாது. ஒரே இடத்திற்கு வழக்குகளை மாற்றுமாறு சீமான், டி.ஜி.பி.,யிடம் மனு அளித்துள்ளார். அதுவரை விசாரணையை ஒத்திவைக்குமாறு வடலுார் இன்ஸ்பெக்டர் உதயகுமாரிடம், வழக்கிறஞர் காமராஜ் மனு அளித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணைக்கு சீமான் ஆஜராக, போலீசார் அவகாசம் அளித்தனர்.
04-Feb-2025