உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போத்தீஸ் திருவிழாகால போட்டி வெற்றியாளர்கள் தேர்ந்தெடுப்பு

போத்தீஸ் திருவிழாகால போட்டி வெற்றியாளர்கள் தேர்ந்தெடுப்பு

புதுச்சேரி : புதுச்சேரி போத்தீஸ் நிறுவனத்தில், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளையொட்டி நடந்த திருவிழா கால போட்டியில் வெற்றி பெற்ற வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி போத்தீஸ் நிறுவன வளாகத்தில் நேற்று நடந்தது.இதில், சுமார் 450 நபர்களுக்கு ரூ. 90 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளது.நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, கோல்ட் ப்ரிமியம் ஆயில் நிர்வாக இயக்குனர் சேத்தன் கோத்தாரி, விமல் கோத்தாரி, ஐ.டி.சி, நிறுவனத்தின் ஏரியா மேலாளர் ஜான் மார்ட்டின்,'பேப் வாசனை' நிறுவனத்தின் இயக்குனர் மணி, பிளாஷ் நிறுவனத்தின் இயக்குநர் சபாபதி ஆகியோர் பரிசு பெறும் வாடிக்கையாளர்களை தேர்வு செய்தனர்.நிகழ்ச்சியில், புதுச்சேரி போத்தீஸ் பொது மேலாளர் பாலமுருகன், மனித வள மேலாளர் மகேஷ், சூப்பர் ஸ்டோர் மேலாளர் அபூபக்கர் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.இதன் பரிசு வழங்கும் விழா வரும் 18ம் தேதி பாண்டி மெரினா கடற்கரையில், போத்தீஸ் மேலாண் இயக்குனர் ரமேஷ் தலைமையில் நடைபெறும்.இத்தகவலை புதுச்சேரி போத்தீஸ் பொது மேலாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி