உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுய தொழில் துவங்க பயிற்சி பட்டறை 

சுய தொழில் துவங்க பயிற்சி பட்டறை 

  புதுச்சேரி: புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் சுய தொழில் துவங்குவதற்கான கலந்தாய்வு பயிற்சி பட்டறை நேற்று நடந்தது.  தொழிலாளர் துறை வளாகத்தில் நடந்த பயிற்சி பட்டறையில், மாவட்டத் தொழில் மையத்தின் வின்சென்ட், இந்தியன் வங்கி அதிகாரி சரளா மற்றும் ஐ.டி.ஐ. சேர்ந்த ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் மற்றும் தொழில் துவங்குவதற்கான நுட்பங்களை விளக்கி கூறினர். இதில் 75க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, சுய தொழில் புரிவதற்கான ஆலோசனைகளை பெற்றனர்.  தொழிலாளர் துறை ஆணையர் சந்திர குமரன் நன்றி கூறினார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்