உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதான இருவருக்கு தனி சிறை

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதான இருவருக்கு தனி சிறை

புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2ம் தேதி தனது வீட்டின் அருகில் விளையாடியபோது மாயமானார். சிறுமி குறித்த தகவல் கிடைக்காததால், பெற்றோர் சோலை நகர் போலீசில் புகார் அளித்தனர். 3 நாட்களாக போலீசார் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. 5ம் தேதி மதியம் சிறுமியின் உடல் கழிவுநீர் வாய்க்காலில் கை கால் கட்டிய நிலையில் மிதந்தது. பிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிறுமியை சீரழித்து கொலை செய்த அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ், 19; விவேகானந்தன், 57; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றால், இருவர் மீதும் பொதுமக்கள் தாக்குதல் நடத்துவர் என்பதால் காலாப்பட்டு சிறைக்கு நேரடியாக அழைத்து செல்லப்பட்டனர். நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமி கொலை வழக்கு விசாரணையை சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையிலான சிறப்பு விசாரணை குழு நேற்று முன்தினம் துவக்கியது. கொலை சம்பவம் நடந்த இடத்தை சிறப்பு குழு நேரில் சென்று ஆய்வு செய்து சில தடயங்களை சேகரித்தது.இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ், விவேகானந்தன் இருவரையும் மற்ற விசாரணை கைதிகளுடன் அடைத்தால், பிரச்னை எழும் என்பதால் தனி சிறை அறையில் அடைக்க போலீசார் சிறைத்துறைக்கு கடிதம் எழுதினர்.அதை ஏற்று கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் விசாரணை கைதிகள் யார்டில், தனி சிறை அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி