| ADDED : மார் 18, 2024 03:45 AM
புதுச்சேரி, : புதுச்சேரியில் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து எல்லை பகுதியில் 10 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து வாகன சோதனைகள் நடந்து வருகிறது.புதுச்சேரியில் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து அனைத்து விதமான மதுபான கடைகளும் 10 மணிக்கு மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. வாக்காளர்களுக்கு மதுபானங்கள் வழங்குவதை தடுக்கவும், வெளிமாநிலங்களுக்கு சட்டவிரோதமாக மதுபானங்கள் கடத்தி செல்வதை தடுக்க, புதுச்சேரி எல்லை பகுதியான கனபதிசெட்டிக்குளம், தவளக்குப்பம், முள்ளோடை, சோரியாங்குப்பம், மடுகரை, மதகடிப்பட்டு, திருக்கனுார், சேதராப்பட்டு, அய்யங்குட்டிப்பாளையம், கோரிமேடு ஆகிய 10 இடங்களில் கலால் துறை சோதனைச் சாவடி அமைத்துள்ளது. இதில் பணியாற்ற 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சோதனைச்சாவடியிலும் சி.சி.டி.வி. கேமிரா பொறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர புதுச்சேரி முழுதும் ஆங்காங்கே போலீசார், துணை ராணுவ படையினருடன் திடீர் வாகன சோதனைகளிலும் ஈடுப்பட்டு வருகின்றனர்.பாக்ஸ்:மதுபான விற்பனை நேரத்தை தாண்டி விற்பதும், சட்டவிரோதமாக கடத்தல் உள்ளிட்ட புகார்களை கலால் துறையின் 0413-2252493 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.