மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
8 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
8 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
8 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
8 hour(s) ago
புதுச்சேரி : உருளையன்பேட்டை தொகுதியில் புதிய கழிவு நீர் குழாய்கள் மற்றும் கழிவுநீர் தொட்டிகள் அமைக்கும் பணியை, நேரு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.உருளையன்பேட்டை தொகுதி, கோவிந்தசாலை, திருமுடிநகர் முதல் தெரு மற்றும் இரண்டாவது தெரு போன்ற பகுதிகளில் அடிக்கடி பாதாள கழிவுநீர் தொட்டிகளில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வீதிகளில் வழிந்து ஓடியது.இந்நிலையில் திருமுடி நகர் முதல் தெரு மற்றும் இரண்டாவது தெரு மேலும் இதர தெருக்களிலும், பொதுப்பணித்துறை சார்பில், ரூ.27.50 லட்சம் செலவில் பொதுசுகாதார கோட்ட கழிவுநீர் உட்கோட்ட பிரிவின் மூலம், புதிய கழிவுநீர் குழாய்கள் மற்றும் கழிவுநீர் தொட்டிகள் அமைக்கும் பணி துவங்கியது. திருமுடி நகர் விநாயகர் கோவில் அருகில் நடந்த நிகழ்ச்சியில், நேரு எம்.எல்.ஏ., பணியை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, கழிவு நீர் உட்கொட்ட பிரிவு உதவி பொறியாளர் வைத்தியநாதன், இளநிலை பொறியாளர் ஜெயபால் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்கள், மனிதநேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago