மேலும் செய்திகள்
அமைச்சருக்கு விருது வழங்கல்
58 minutes ago
அதிவேகமாக வாகனம் ஓட்டிய 22 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
அணிவகுப்பு மரியாதையில் பிரசிடென்சி பள்ளி முதலிடம்
1 hour(s) ago
நிரந்தர சபாநாயகர் தி.மு.க., தீர்மானம்
3 hour(s) ago
பாகூர் : கால்நடைகளுக்காக வாங்கப்பட்டுள்ள ஆம்புலன்சை கண்களில் காட்டுங்கள் என செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேசினார். புதுச்சேரி கால்நடை துறை சார்பில் குருவிநத்தம் கிராமத்தில் நடைபெற்ற கால்நடைகள் மற்றும் கோழிகள் எழில் கண்காட்சி பரிசளிப்பு விழாவில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேசியதாவது; பால் மூலமாக ஈட்டக்கூடிய பொருளாதாரம் கிராமப்புறங்களில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதில், மாதம் தோறும் வருமானத்தை பார்த்து விடலாம். குருவிநத்தம் கிராமத்தில் கால்நடை மருத்துவமனைக்கு கட்டடம் கட்டப்படாமல் உள்ளது.இங்கு, கால்நடை மருத்துவமனைக்கு கட்டடம் கட்டப்பட்டால், குருவிநத்தம் மட்டுமின்றி, சோரியாங்குப்பம், இருளஞ்சந்தை ஆகிய கிராமங்களில் உள்ள கால்நடை வளர்போருக்கு பயனுள்ளதாக இருக்கும்.கால்நடை துறையின் மூலமாக கால்நடைகளுக்காக புதியதாக ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். நான் இதுவரை அந்த ஆம்புலன்ஸை பார்த்தது இல்லை. அதனை கண்ணில் காட்டுங்கள் என்றார்.
58 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago
3 hour(s) ago