எஸ்.ஐ., பணிக்கான தேர்வு தேதி மாற்றம்
புதுச்சேரி: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு, அடுத்த மாதம் 22ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வு வாரிய சார்பு செயலாளர் ஜெய்சங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி போலீஸ் துறையில், காலியாக உள்ள 70 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில், 17 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இவர்களுக்கான எழுத்து தேர்வு மார்ச் 8ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்தேர்வு வரும் பிப்ரவரி 22ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஹால்டிக்கெட் வெளியிடப்படும் தேதி, தேர்வு மையம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.