உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாகனம் மோதி அக்கா, தம்பி படுகாயம்

வாகனம் மோதி அக்கா, தம்பி படுகாயம்

புதுச்சேரி : வில்லியனுார் அடுத்த வி.மணவெளி, தண்டுகார வீதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் கணேஷ், 19; தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். இவரது சகோதரி. திரிபுரசுந்தரி, 21; காலாப்பட்டு தனியார் மருத்துவ கல்லுாரியில் படிக்கிறார். அவரை மூலக்குளத்தில் பஸ் ஏற்றி விடுவதற்காக நேற்று காலை மொபைட்டில் அழைத்து சென்றார். மூலக்குளம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.காயமடைந்த கணேஷ், திரிபுரசுந்தரி ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஜிப்மரில் சேர்த்தனர்.விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி