உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வடிகால்வாய்க்கால் பணி சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வடிகால்வாய்க்கால் பணி சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வில்லியனுார்: சுல்தான்பேட்டை ராஜா நகர் முதல் முத்துப்பிள்ளைபாளையம் வரை வடிகால் வாய்க்கால் அமைக்க பூமி பூஜை செய்து பணிகள் துவக்கிவைக்கப்பட்டது. வில்லியனுார் தொகுதி சுல்தான்பேட்டை ராஜா நகரில் துவங்கி முத்துப்பிள்ளைபாளையம் வரை செல்லும் பல்ல வாய்க்காலில் இருந்து பிரியும் கிளை வாய்க்கால் பகுதியில் பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் சார்பில் ரூ.30:21 லட்சம் செலவில் 120 மீட்டர் நீளத்திற்கு புதியதாக சிமென்ட் வாய்க்கால் அமைக்கும் பணியை சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கிவைத்தார்.இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் செல்வராசு, இளநிலைப் பொறியாளர் கணேஷ் மற்றும் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள், ஜமாத்தார்கள், கூட்டணிக் கட்சியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை