உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தி.மு.க., கூட்டணியை முறிக்க உள்விளையாட்டு காங்., தலைவர்கள் மீது சிவா பகிரங்க புகார்

தி.மு.க., கூட்டணியை முறிக்க உள்விளையாட்டு காங்., தலைவர்கள் மீது சிவா பகிரங்க புகார்

புதுச்சேரி : புதுச்சேரியில் கூட்டணியை முறிக்க, காங்., கட்சியில் இரண்டு தலைவர்கள் உள்விளையாட்டு விளையாடுவதாக, மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தி.மு.க., சார்பில், திருவள்ளுவர் தின விழா நேற்று கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில் பேசிய தி.மு.க., நிர்வாகிகள் பலர், தி.மு.க.,வை காங்., கட்சி மதிக்கவில்லை; அதனால், வரும் தேர்தலில் தி.மு.க., தனித்து போட்டியிட வேண்டும் என கூறினர். மேலும், காங்., தலைவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் வசைப்பாடினர்.தொடர்ந்து, எதிர்கட்சி தலைவரும், மாநில தி.மு.க., அமைப்பாளருமான சிவா பேசியதாவது:பிரதமரின் ஆலோசகர் போல் இருந்தவருக்கும் (நாராயணசாமி), சபாநாயகர், முதல்வராக இருந்தவருக்கும் (வைத்திலிங்கம்) 'அட்வைஸ்' கூற முடியாது.அவர்களின் தற்போதைய நிலைப்பாடு ஆற்றில் தத்தளித்து செல்வோருக்கு கிடைத்த துடுப்புபோல. துடுப்பை பிடித்தவர்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.கவர்னர், பிரச்னை உள்ள இடத்திற்கு செல்லாமல் ஏதேனும் ஊருக்கு சென்று டான்ஸ் ஆடிவிட்டு, புதுச்சேரிக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களை பேசிவிட்டு செல்வார்.இந்த ஆட்சியில் ஒன்றும் செய்ய முடியவில்லை; அடுத்த முறை தனித்து நின்று ஆட்சியை பிடித்து பொதுமக்களுக்கு நல்லது செய்வோம் என பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூறுகின்றனர்.ராகுல் தான் அடுத்த பிரதமர் என தி.மு.க., தலைவர் அறிவித்தார். அந்த நிலைப்பாட்டில் இருந்து இதுவரை மாறவில்லை. அதனால், தி.மு.க., தலைவருக்கும், காங்., கட்சிக்கும் நல்ல உறவு உள்ளது. ஆனால், புதுச்சேரியில் சில தலைவர்கள் நம்மை விரும்பவில்லை.தி.மு.க., புதுச்சேரியில் 27 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை என்றாலும், கொள்கையுடன் கட்சி நடத்துகிறது. ஆட்சிக்காக போராடி கொண்டிருக்கிறது. அவர்களுக்கு என்.ஆர்.காங்., - பா.ஜ., ஆட்சி அமைந்ததில் வருத்தம் இல்லை.குறைந்த ஓட்டில் 4 தி.மு.க.,வினர் தோற்றுள்ளனர். தற்போது தி.மு.க.,வினர் 12 பேர் என்பது அவர்களின் கணக்கு. அதனால் இங்கு 2 பேர் உள்விளையாட்டு விளையாடுகின்றனர். அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.இவ்வாறு, சிவா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி