எஸ்.எம்.வி., பள்ளி மாணவர்கள் ரோபோட்டிக்ஸ் போட்டியில் சாதனை
புதுச்சேரி: மணக்குள விநாயகர் எஸ்.எம்.வி. பள்ளியின் மாணவர்கள் ரோபோட்டிக்ஸ் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.சென்னை, பெரும்பாக் கம் ஆர்ச்சிட் இண்டர்நேஷனல் பள்ளியில் மெக்கத்லால் அறிவியல் படைப்பாக்க அமைப்பு சார்பில் ரோபோட்டிக்ஸ் போட்டிகள் நடந்தது. இப்போட்டிக்கு, 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.புதுச்சேரி, மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தின் எஸ்.எம்.வி பள்ளியின் 10 மாணவர்கள் மூன்று குழுவாகப் பங்கேற்றனர்.ரேஸர் ரோபோ, லைன் பாலோவர் மற்றும் தடைகளைத் தாண்டிச் செல்லுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் நடந்த போட்டிகளில் லைன் பாலோவர் பிரிவில் முதல் பரிசையும், ரேஸர் ரோபோ பிரிவில் இரண்டாம் பரிசையும் எஸ்.எம்.வி., பள்ளி மாணவர்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.பள்ளியின் முதல்வர் அனிதா சாந்தகுமார், அறிவியல் ஆசிரியை சத்தியப்பிரியா மாணவர்களுக்கு பயிற்சி அளித்திருந்தனர். முதல் கட்ட போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நவம்பரில் பெங்களூருவில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரியர்களை மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் தனசேகரன், பொறியியல் கல்லுாரியின் இயக்குனர் வெங்கடாஜலபதி, பள்ளியின் முதல்வர் பாராட்டினர்.மாணவர்களுக்கான பயண ஏற்பாடுகளை ஆசிரியர் பிரபாகரன், அலுவலக மேலாளர் வெங்கட் ராஜூ ஆகியோர் செய்திருந்தனர்.