மேலும் செய்திகள்
புகழூர் அரசு பள்ளியில் உலக மண் தின விழா
06-Dec-2025
புதுச்சேரி: சுத்துக்கேணியில் புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், மண்வள விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. முகாமில் வேளாண் அலுவலர் வெங்கடாசலம் வரவேற்றார். வேளாண் அலுவலர் மாசிலாமணி, கலந்து கொண்டு, மண்வள அட்டையின் முக்கியத்துவத்தை விளக்கி, விவசாயிகளுக்கு மண்வள அட்டையை வழங்கினார். தொடர்ந்து, பேரூட்ட சத்து, நுண்ணுாட்ட சத்து இடுவதன் மூலம் அதிக மகசூல் பெறப்படும் என்பது எடுத்துரைக்கப்பட்டது. முகாமில் சுத்துக்கேணி பகுதியை சேர்ந்த விவசாயிகள், மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
06-Dec-2025