| ADDED : நவ 25, 2025 05:32 AM
புதுச்சேரி, நவ. 25- புதுச்சேரி நகராட்சி ஊழியர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது. புதுச்சேரி, நகராட்சி அலுவலகத்தில் நடந்த முகாமை, ஆணையர் கந்தசாமி துவக்கி வைத்தார். இதில் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் அஜய்சின்ஹா, சச்சின் சர்மா ஆகியோர் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்குவது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். தொடர்ந்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கழிவு மேலாண்மை தொடர்பான பிரச்னைகளை கையாளவும், 5 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள நிறுவனங்கள் தங்களுக்கென தனிப்பட்ட கழிவு பதப்படுத்தும் அமைப்பது கொண்டிருப்பது சிறந்தது என அறிவுறுத்தினர். முகாமில், செயற்பொறியாளர் சிவபாலன், சுகாதார அதிகாரி ஆர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.