உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தாயை தாக்கிய  மகன் கைது

 தாயை தாக்கிய  மகன் கைது

புதுச்சேரி: தாயை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த மகனை போலீசார் கைது செய்தனர். முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் பக்கிரி மனைவி வசந்தா, 67; இவரது கணவர் இறந்ததால், தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது இளைய மகன் சக்திவேல், கடந்த 17ம் தேதி, வீட்டில் இருந்த தனது தாயிடம் ரேஷன் கார்டை கேட்டார். அவர் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த, அவர் ரேஷன் கார்டை பறித்து, அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து, வசந்தா கொடுத்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சக்திவேலை, 45; கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை