உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாய் திட்டியதால்மகன் தற்கொலை

தாய் திட்டியதால்மகன் தற்கொலை

புதுச்சேரி : காலாப்பட்டு அருகே தாய் திட்டியதால் மனமுடைந்த மகன் தற்கொலை செய்து கொண்டார். பெரியகாலப்பட்டு, வள்ளுவர் வீதியை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் ஸ்ரீராம், 24; தனியார்நிறுவனம் ஒன்றில்ஒப்பந்த ஊழியராக பணிபுரிகிறார். இவர் கடந்த 3ம் தேதி பணிமுடிந்து வீட்டிற்கு வந்து விட்டு வெளியே செல்வதாக தனது தாய் வசந்தியிடம் கூறினார். வசந்தி, ஏன் அடிக்கடி ஊரை சுற்றுகிறாய் என கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஸ்ரீராம், அங்குள்ள சுடுகாட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !