| ADDED : பிப் 11, 2024 10:34 PM
புதுச்சேரி: இடம் பிடித்தல் தகராறில் சூப் கடை உரிளையாளரை தாக்கிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கோரிமேடு, வீமன் நகரைச் சேர்ந்தவர் புகழ், 24; ஜிப்மர் மருத்துவமனை எதிரில் சூப் கடை வைத்துள்ளார். இவரது கடை அருகில் காலி இடம் இருந்ததால், அங்கு டிபன் கடை வைக்க முயற்சித்தார். இதற்கு கோரிமேடு காமராஜர் நகரைச் சேர்ந்த அம்புரோஸ் எதிரப்பு தெரிவித்தார். தொடர்ந்து, அம்புரோஸ், குண்டுபாளையம்ராம்குமார், ஜீவானந்தபுரம் தர்மதுரை,லாஸ்பேட்டை ரூபன் ஆகியோர், புகழிடம் இங்கு டிபன் கடை வைக்க கூடாது. அந்த இடத்தில் நாங்கள் டிபன் கடை வைக்க போகிறோம் எனக் கூறி, அவரை தாக்கி, சூப் கடையை சூறையாடி, கொலை மிரட்டல் விடுத்தனர்.புகழ் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து அம்புரோஸ் உள்ளிட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர்.