உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கராத்தே போட்டியில் முதலிடம்; சபாநாயகர் பரிசு வழங்கல்

கராத்தே போட்டியில் முதலிடம்; சபாநாயகர் பரிசு வழங்கல்

அரியாங்குப்பம்; மாநில அளவில் நடந்த கராத்தே போட்டியில் முதலிடம் பிடித்த மாணவருக்கு, சபாநாயகர் செல்வம் பரிசு வழங்கினார். மணவெளி தொகுதி அரசு துவக்கப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை மூலம் வழங்கப்படும், இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சாந்திகுமாரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம், மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கிப் பேசினார். அதனை தொடர்ந்து, மாநில அளவில் நடந்த, கராத்தே போட்டியில், பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் மாணவர் தேவிப்பிரியன் முதலிடத்தை பிடித்தார். அவருக்கு சபாநாயகர், பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், எழிலரசி உட்பட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை ராணிமேரி ஏஞ்சலின் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை