மேலும் செய்திகள்
அதிவேக வாகனங்களுக்கு அபராதம்
23-Sep-2024
புதுச்சேரி: போக்குவரத்து விதிமீறலில் ஈடுப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு, கடந்த இரண்டரை ஆண்டில் விதிக்கப்பட்ட அபராத தொகையில், ரூ. 6.5 கோடி நிலுவை வசூலிக்க 7 நாட்கள் சிறப்பு முகாம் நடக்கிறது. புதுச்சேரி போக்குவரத்து போலீசார் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கடந்த 2022ம் ஆண்டு முதல் ஸ்பாட் பைன் மெஷின் மூலம் இ-சலான் மூலம் அபராதம் விதித்து வருகின்றனர். அபராதம் விதிக்கப்பட்ட தகவல் வாகன ஓட்டியின் மொபைல்போனுக்கு தகவல் அனுப்படுகிறது. இ-சலான் மூலம் அபராதம் அனுப்பினாலும், பலர் அந்த அபராத தொகையை ஆன்லைன் அல்லது நேரடியாக போலீஸ் நிலையத்தில் ஆஜராகி செலுத்த வேண்டும்.கடந்த 2022 முதல் இரண்டரை ஆண்டுகளில் பல ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் இ-சலான் பெற்றும் அபராத தொகையை செலுத்தவில்லை என தெரியவந்தது. இதன் மூலம் ரூ. 6.5 கோடி அபராத தொகை நிலுவையில் உள்ளது.நிலுவை அபராத தொகையை வசூலிக்க போலீஸ் டி.ஜி.பி., உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, போக்குவரத்து போலீசார் இன்று 1ம் தேதி முதல் 7 ம் தேதி வரை போக்குவரத்து பிரிவு போலீஸ் நிலையங்களில் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்த அறிவுறுத்தி உள்ளது. செலுத்த தவறும் வாகன ஓட்டிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மற்றும் லைசன் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
23-Sep-2024