குரு சித்தானந்த சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை
புதுச்சேரி: கருவடிக்குப்பம், குரு சித்தானந்த சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை நடைபெற்றது.நவக்கிரகங்களில் ஒன்றான குரு பகவான் நேற்று பகல்1:19 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்ந்தார். அதனையொட்டி,கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.காலையில்கலச பிரதிஷ்டை செய்து, கணபதி ேஹாமம், குரு பகவான் காயத்ரி மந்திர ேஹாமம், நவக்கிரக ேஹாமம் நடைபெற்றது. தொடர்ந்து, குருபகவானுக்கு மஞ்சள், விபூதி, பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட மங்கள திரவியங்களால்மகா அபிேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பகல் 1:19 மணிக்கு, குரு பகவானுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.பூஜைகளை தேவஸ்தான குருக்கள் தேவசேனாதிபதி செய்தார். பூஜை ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன், துணைத் தலைவர் சசிக்குமார், செயலாளர் மதிவாணன், பொருளாளர் கதிரேசன், உறுப்பினர் அருள்செய்திருந்தனர்.