உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி இண்டியா கூட்டணிக்குள் பிளவு தனித்தனியாக போராட்டம், மறியல்

புதுச்சேரி இண்டியா கூட்டணிக்குள் பிளவு தனித்தனியாக போராட்டம், மறியல்

புதுச்சேரி : புதுச்சேரியில் தி.மு.க., தொழிற்சங்கம் மற்றும் காங்., கம்யூ., தொழிற்சங்கள் தனித்தனியாக போராட்டம் நடத்தியது, இண்டியா கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது. புதுச்சேரியில் காங்., தி.மு.க., இந்திய கம்யூ., மா. கம்யூ., உள்ளிட்ட கட்சிகள் இண்டியா கூட்டணியில் உள்ளது. இதில் காங்., தி.மு.க.விற்கு இடையே கடந்த சில வாரங்களாக உரசல் ஏற்பட்டு வருகிறது. கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மாறிமாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இண்டியா கூட்டணியில் உள்ள தொழிற்சங்கங்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தது. புதுச்சேரியில் இண்டியா கூட்டணியில் உள்ள தி.மு.க., தொழிற்சங்கம் தனியாக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்திய கம்யூ., மா.கம்யூ., காங்., கட்சியின் தொழிற்சங்கங்கள் தனியாக பேரணி மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டது. இது புதுச்சேரி இண்டியா கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டு உள்ளதை வெளிச்சம்போட்டு காட்டுகிறது. எம்.பி., தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை