உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

அரியாங்குப்பம் : பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு பரிசளிக்கப் பட்டது.தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சகாயமேரி தலைமை தாங்கினார். ஆனந்தன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பாராட்டினார்.நிகழ்ச்சியில், பள்ளி கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஆசிரியர் அமுதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை