உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்டேட் பாங்க் கடன் திருவிழா: இரண்டு நாட்கள் நடக்கிறது

ஸ்டேட் பாங்க் கடன் திருவிழா: இரண்டு நாட்கள் நடக்கிறது

புதுச்சேரி : புதுச்சேரியில் ஸ்டேட் பாங்க் சார்பில் மாபெரும் வீட்டு கடன் திருவிழா வரும் 6ம் மற்றும் 7ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடக்கிறது.புதுச்சேரி ஸ்டேட் பாங்க்மண்டல அலுவலகம் சார்பில், மாபெரும் வீட்டு கடன் திருவிழா மற்றும் வாடிக்கையாளர்கள் சந்திப்பு இரண்டு நாட்கள் நடக்கிறது.வேல் சொக்கநாதர் திருமண மண்டபத்தில் வரும் 6, 7ம் தேதி, மதியம் 12:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை முகாம் நடக்கிறது.முகாமில், சிறப்பு அம்சமாக, சிபில் உடனுக்குடனே தெரிந்து கொள்ளலாம். ஸ்பாட் சேங்ஷன் லெட்டர் வழங்கப்படுகிறது. இதில், புதுச்சேரியை முன்னணி பில்டர்ஸ் மற்றும் கார் டீலர்ஸ் கலந்து கொள்கின்றனர்.இந்த வாய்ப்பை, வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என, மண்டல மேலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி