புதுச்சேரி: தொண்டமாநத்தம் சவுதார் நெட்பால் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 8 வது சீனியர் மாநில அளவிலான மகளிர் மற்றும் ஆடவர் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2 நாட்கள் நடந்தது. மகளிர் பிரிவில் 13 அணிகள், ஆண்கள் பிரிவில் 13 அணிகள் கலந்து கொண்டன. ஆண்கள் பிரிவில் வீமநகர் சரவணன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதலிடம், சவுதார் ஸ்டோர்ட்ஸ் கிளப் அணி இரண்டாமிடம், சாணாரபேட்டை ஏ.கே.எஸ்., ஸ்போர்ட்ஸ் கிளப் மூன்றாமிடத்தையும் பிடித்தன. மகளிர் பிரிவில் வீமநகர் சரவணன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதலிடம், லாஸ்பேட்டை எல்.எப்.பி., போர்ட்ஸ் கிளப் அணி இரண்டாமிடம், சவுதார் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி மூன்றாமிடத்தையும் பிடித்தன. தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், ராமநாதபுரம் சாய் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் சுசந்திகா நாகமுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார். சிறப்பாக விளையாடிய ஆண்கள் பிரிவில் வருண், மகளிர் பிரிவில் விஜயலட்சுமி ஆகியோருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. விழாவில், சவுதார் நெட்பால் ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் தெய்வசிகாமணி, பயிற்சியாளர் சுமன், புதுச்சேரி நெட்பால் கழகத்தின் துணை சேர்மன் சிவக்குமார், முன்னாள் தலைவர் நாகரத்தினம், துணை தலைவர் நாராயணன், பொருளாளர் சத்தியராஜ், செயற்குழு உறுப்பினர்கள் இனியன், தமிழரசன், விஜயகுமார், பாலாஜி, முருகன், உதயக்குமார், பிரகாஷ், ஹரி உட்பட பலர் கலந்து கொண்டனர். புதுச்சேரி அமெச்சூர் நெட்பால் சங்கத்தின் தலைவர் பார்த்திபராஜன் நன்றி கூறினார்.