மேலும் செய்திகள்
மதுரை நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
17 minutes ago
காலையில் குறைவு; மாலையில் உயர்வு
20 minutes ago
ஆயுதபூஜை நாளில் ரூ.240 கோடிக்கு சரக்கு விற்பனை
28 minutes ago
காரைக்கால்:தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசு கல்லுாரி இறுதி ஆண்டு மாணவ - மாணவியர், 14 பேர் நேற்று மதியம் காரைக்கால் கடற்கரையில் அமர்ந்து சாப்பிட்டனர்.பின், திருநாகேஸ்வரத்தை சேர்ந்த மாணவி ஹேமாமாலினி, 20, திப்பிராஜபுரம் ரித்தன்யா, 18, ஆகிய இருவரும் கடலில் குளித்தனர். அப்போது, ராட்சத அலையில் சிக்கி இருவரும் இழுத்து செல்லப்பட்டனர்.இதைப்பார்த்த சக மாணவர்கள் திப்பிராஜபுரம் புகழேந்தி, 25, எஸ்.புத்துார் அபிலாஷ், 20, வலையப்பேட்டை ஜெகதீஷ், 20, மைக்கல், 20, ஆகியோர் கடலில் இறங்கி மாணவியரை மீட்க முயன்றனர். அவர்களும் அலையில் சிக்கினர்.அங்கிருந்த மீனவர்கள் கடலில் இறங்கி ரித்தன்யா, புகழேந்தி, மைக்கல் ஆகியோரை மீட்டனர். ஹேமாமாலினி இறந்த நிலையில் மீட்கப்பட்டார். அபிலாஷ், ஜெகதீஷ் ஆகிய இருவரும் மாயமாகினர்.மீட்கப்பட்ட மூவரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.காரைக்கால் போலீசார் இறந்த மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மாயமான மாணவர்கள் இருவரை, போலீசார் மீனவர்கள் உதவியுடன் தேடி வருகின்றனர்.
17 minutes ago
20 minutes ago
28 minutes ago