மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
4 hour(s) ago
புதுச்சேரி : அகில இந்திய அளவில் நடந்த ஐ.ஐ.டி., ஜே.இ.இ., முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளி மாணவர் பாலகுமரன் 99.90 சதவீதம் பெற்று புதுச்சேரி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவர் ஈஸ்வரநாத் வேதியியல் பாடத்தில் 100 சதவீதம் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.மாணவர்கள் ஈஸ்வரநாத், முக்கேஷ் வர்மா, ஜோஷ்வா கிருபாகரன், ஹரிஸ்ரீதர், பிரியதர்ஷன், கீர்த்தனா, அர்ஜூன், தனிஷா, பிரகன்யா, ஆரியன், பாலசுவேதா, சீனிவாஸ், ஸ்ரீஹரி ஆகியோர் அதிக சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர். 99 சதவீதம் 14 மாணவர்களும், 95 சதவீதம் முதல் 98.99 வரை 22 மாணவர்களும், 90 சதவீதம் முதல் 94.99 சதவீதம் வரை 27 மாணவர்களும்,85 சதவீதம் முதல் 89.99 சதவீதம் வரை 10 மாணவர்களும், 80 சதவீதம் முதல் 84.99 சதவீதம் வரை 12 மாணவர்களும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.வெற்றிப் பெற்ற மாணவர்களை ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீவித்யா நாராயணா அறக்கட்டளை டிரஸ்டி அனுதாபூனமல்லி ஆகியோர் பாராட்டினர்.நிறுவனர் ஆனந்தன் கூறுகையில், புதுச்சேரி மாநில அளவில் அதிகமான மாணவர்கள் தேர்வாகியுள்ள ஒரே பள்ளி ஆதித்யா மட்டுமே. இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு பாராட்டுகள். அகில இந்திய அளவில் நடக்கும் மருத்துவம், பொறியியல், வர்த்தகம், பட்டய கணக்காளர் ஆகிய நுழைவு தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சிகள் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆதித்யா கல்வி குழுமத்தில் கற்பிக்கப்பட்டு வருகின்றது என்றார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago