உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாடப்பொருள் வீடியோ புதுச்சேரி மாணவி சாதனை

பாடப்பொருள் வீடியோ புதுச்சேரி மாணவி சாதனை

புதுச்சேரி: மேகாலயாவில் நடந்த போட்டியில் புதுச்சேரி மாணவர்கள் விருது பெற்று சாதனை படைத்துள்ளனர்.மேகாலயா மாநிலத்தில் உள்ள தேசிய அளவிலான குழந்தைகள் கல்வி சார்பில் பல்வேறு தலைப்புகளின் கீழ் போட்டிகள் வடகிழக்கு பிராந்திய கல்வி நிறுவனத்தில் நடந்தது.மாணவர்கள், ஆசிரியர்கள் தனிநபர் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் புதுச்சேரி போப் ஜான் பால் கல்லுாரியில் நான்காம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி படித்து வரும் மாணவி கனியமுது, கல்லுாரி மாணவர்கள் பிரிவில் உருவாக்கிய பாடப்பொருள் வீடியோ ரூ. 5 ஆயிரம் பரிசு தொகை மற்றும் விருது வென்றார்.சிலாங்கியில் நடந்த பரிசளிப்பு விழாவில், மேகாலயா மாநில கல்வித்துறை அமைச்சர் ரத்தம் சங்மா விருது வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை