மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
6 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
6 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
6 hour(s) ago
வில்லியனுார் : வில்லியனுார் அருகே தரமற்ற கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி குறித்து சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.வில்லியனுார் தொகுதி ஜி.என் பாளையம் மெயின் ரோட்டில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.40 லட்சம் செலவில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் தார் சாலை, முத்துப்பிள்ளைபாளைம் மெயின்ரோடு வரையில் நடைபெறும் இந்த பணியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.தொடர்ந்து நடந்துவரும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியில் கலவை இயந்திரத்தில் நீரின் அளவு அதிகமாகி கான்கிரீட் கலவை தண்ணீராக வெளியேறும் வீடியோவை கிராம இளைஞர்கள் படம் பிடித்து அதனை சமூக வலைதளத்தில் வைரலாகி தரமற்ற கழிவுநீர் வாய்க்கால் அமைப்பதாக வலைதளத்தில் புகாராக வெளியிட்டுள்ளனர்.சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை பொறியாளர் கள் குழுவினர் ஜி.என். பாளையத்தில் தரமற்ற முறை யில் செய்யப்படும் கழிவுநீர் அமைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்து வேலையை தரமாக செய்ய வலியுறுத்த வேண்டும்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago