உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி திறப்பு 

சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி திறப்பு 

புதுச்சேரி: புதுச்சேரி ஸ்டான்ஸ்போர்டு பள்ளியில் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியை சி.எஸ்.கே., அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் திறந்து வைத்தார்.புதுச்சேரி, மூலக்குளம் பிச்சவீரன்பேட்டில் இயங்கி வரும் ஸ்டான்ஸ் போர்டு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி திறப்பு விழா நடந்தது.விழாவில், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியை திறந்து வைத்தார்.சி.எஸ்.கே., மேலாண் இயக்குநர் விஸ்வநாதன், அமைச்சர் சாய் சரவணன் குமார், சிவசங்கர் எம்.எல்.ஏ., சாம் பால் கல்வி அறக்கட்டளை சேர்மன் சாம்பால், அறக்கட்டளை இயக்குநர் குமரவேல், தலைமை நிர்வாக அதிகாரி சுப்ரமணியம், அறக்கட்டளையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லுாரி முதல்வர்கள் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், 'இங்கு துவங்கப்பட்டுள்ள சூப்பர் கிங்ஸ் அகாடமி மூலம் கிரிக்கெட்டில் ஒருநாள், குழந்தைகளாகிய நீங்கள் நல்ல நிலைமைக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி திறந்தது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை