உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரிமா சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

அரிமா சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

புதுச்சேரி: பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டி அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, ஆந்திர மகா சபாவில் நடந்தது. அரிமா ரவிச்சந்திரன் வரவேற்றார்.சங்க இயக்குனர் பாஸ்கரன், முன்னிலை வகித்தார். சங்கத்தின் புதிய தலைவராக ராஜசேகர், செயலாளராக ராஜராஜன், பொருளாளராக ஸ்ரீகாந்த் பதவி ஏற்றுக்கொண்டனர். முன்னாள் ஆளுநர்கள் முரளி, கோபிகிருஷ்ணா, சங்க நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர். துணை ஆளுநர் கனகதரன் புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தினார். இரண்டாம் துணை நிலை ஆளுநர் கமல் கிஷோர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாவட்ட தலைவர் சிவகாந்தன் சேவை திட்டத்தை துவக்கி வைத்தார். கடலுார் அரிமா திருமலை, மண்டல தலைவர் ஜெயராமன், வட்டார தலைவி செந்தாமரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஏற்பாடுகளை ரவிச்சந்திரன் செய்திருந்தார். பாஸ்கர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி