உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கல்

கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கல்

திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் போலீஸ் சார்பில், எல்லைப் பகுதியில் ஹெல்மெட் அணிந்து வந்தவருக்கு இனிப்பும், அணியாமல் வந்தவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிவது நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் அறிவுறுத்தலின் பேரில், காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையில் போலீசார் நேற்று புதுச்சேரி எல்லைப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, தமிழகப் பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டினர்.பின், ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை பிடித்து, புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியால், அவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், சப் இன்ஸ்பெக்டர் லுார்து நாதன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ