மேலும் செய்திகள்
மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
16-Aug-2025
புதுச்சேரி : புதுச்சேரி ராமகிருஷ் ண சேவா சங்கத்தினரால் நடத்தப்பட்டு வரும், கருவடிக்குப்பம் ராமகிருஷ்ண மேல்நிலை பள்ளியில், புதுச்சேரி ரோட்டரி சங்கம் மிட்டவுன் இணைந்து முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. புதுச்சேரி குவாலிட்டி ஆர்கேட் உரிமையாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாணவர் தஷ்வின் வரவேற்றார். புதுச்சேரி ராமகிருஷ்ண மடத்தின் பொறுப்பாளர் சுவாமி நித்யேஷ்நந்தா மகராஜ் வாழ்த்தி பேசினார். புதுச்சேரி ரோட்டரி சங்கம் மிட்டவுன் தலைவர் விக்ரம், தாளாளர் கணேசன், இயக்குநர் கிருஷ்ணராஜூ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில், 2024 -2025ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகி அதிகாரி ராமுலு, சேவா சங்க பொருளாளர் முத்துராமன், செயலாளர் சுரீந்தர், துணை செயலாளர் சுவாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவர் ஜோயஸ் ஆப்ரஹாம் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் சுந்தரமூர்த்தி செய்திருந்தார். மாணவி கவிபிரியா நன்றி கூறினார்.
16-Aug-2025