உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டெலிபதி ஓவியக் கண்காட்சி நிறைவு

டெலிபதி ஓவியக் கண்காட்சி நிறைவு

புதுச்சேரி : புதுச்சேரியில், டெலிபதி எனப்படும் தொலைமன உணர்தல் தலைப்பில் ஓவிய கண்காட்சி நடந்தது.உலகின் 19ம் நுாற்றாண்டில் கியூபிசம் என்ற நவீன ஓவிய பாணி பிரபலமடைய துவங்கியது. நவீன ஓவிய தந்தையான பாப்லோ பிகாசோ உருவாக்கிய இந்த ஓவிய பாணியில் ஈர்க்கப்பட்ட பல ஓவியர்கள் இத்தகைய ஓவியங்களை இன்றும் தீட்டி வருகின்றனர்.அந்த வகையில் கேரளாவை சேர்ந்த நவீன ஓவியர் ஜோஷ் ஜார்ஜ் ஜோசப், கியூபிசத்திற்கு பிறகு என்ற தலைப்பில் நடத்திய டெலிபதி ஓவிய கண்காட்சி, புதுச்சேரி ஆரோதன் ஆர்ட் கேலரியில் கடந்த 9ம் தேதி துவங்கியது.தொலைமன உணர்தல் குறித்து ஓவியங்கள் இடம் பெற்று இருந்தன. இக்கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஓவிய ஆர்வலர்கள் இக்கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டனர். ஐந்து புலன்கள் தொடுதல் இன்றி, தொலைவில் உள்ளவரது மனதினை உணர்ந்து, அதனை ஓவியமாக படைப்பதை, டெலிபதி ஓவியங்கள் உணர்த்துவதால் அது தொடர்பாக விளக்கங்களை ஓவியர் ஜோஷ் ஜார்ஜ் ஜோசபிடம் நேரில் புதுச்சேரியில் உள்ள ஓவியர்கள், ஓவிய ஆர்வலர்கள் கேட்டறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை